15 குழந்தைகளின் இதய ஆபரேஷனுக்கு உதவிய நடிகை சமந்தா

15 பச்சிளம் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்திருக்கிறார் நடிகை சமந்தா.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுடன் சமந்தா திருமணம் சமீபத்தில் நடந்தது. தொடர்ந்து சினிமாவில் நடித்து  வரும் சமந்தா, பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

இந்த அமைப்பின் மூலம் வசதியற்றி ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுகளுக்கு அவர் உதவி செய்து வந்தார்.  இந்நிலையில் தற்போது ஒரே  சமயத்தில் 15 பச்சிளம் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு சமந்தா உதவியிருக்கிறார். 

15 குழந்தைகளுக்கும் விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.இது குறித்து சமந்தா கூறும்போது, ‘அழகான 15 குழந்தைகளும் இப்போது ஆரோக்கியமான இதயத்துடன் நலமாக இருக்கிறார்கள்’ என டிவிட்டரில்  தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த செயலை திரையுலகினரும் தொண்டு அமைப்பினரும் பாராட்டியுள்ளனர்.