இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்!' - அமலாபால் பாய்ச்சல்

நடிகை அமலபால்  வாங்கிய பென்ஸ் காரை புதுச்சேரியில் பதிவு செய்து ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக மலையாள பத்திரிகை மாத்ரூபூமி செய்தி வெளியிட்டது. இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தி வெளியிட்ட மாத்ரூபூமி நாளிதழ் மற்றும் சேனல் மீது அமலாபால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

''100 ஆண்டு கால வரலாறு கொண்ட பத்திரிகை... சுதந்திரத்துக்காக போராடிய பத்திரிகை. இன்றும் விற்பனைக்காக இது போன்ற செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. நான் கார் வாங்கியதில் எந்த விதிமீறலும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த செய்தியால் நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த வேதனையடைந்திருக்கிறோம். இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வருமான வரியாக கட்டியிருக்கிறேன். நான் இந்திய பிரஜை. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்க எனக்கு உரிமை இருக்கிறது. தமிழ், மலையாளச் சினிமாக்களில் அதிகம் நடித்திருக்கிறேன். இந்த இரு மாநிலங்களிலும் சொத்துக்கள் வாங்குவேன். பெங்களுருவிலும் கூட வாங்குவேன். பெங்களுருவிலும் ரூபாய்தானே பயன்பாட்டில் உள்ளது. 

மத்திய அரசு, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பைக் கொண்டுள்ளது. இது போலவே வருங்காலத்தில் மலையாளி, தமிழர்கள், குஜராத்தி, பஞ்சாபி என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்தியர்கள் மட்டும்தான் இருப்பார்கள். புதிய தலைமுறை இணைந்து உழைத்து இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும். வறுமை, ஊழல், லஞ்சம் போன்ற சமூகப்பிரச்னைகளை எதிர்த்து போராடுவதை விட்டுவிட்டு, வாசகர்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு இது போன்ற செய்திகளை வெளியிட வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார். 

Ninaivil

திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar