‘குயின்’ படத்துக்காக பிரான்ஸ் சென்றிருக்கும் நான்கு நடிகைகள்!

இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘குயின்’. இந்தப் படத்தை, தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இந்தி ‘குயின்’ படத்தில் கங்கனா ரனாவத் நடித்த கேரக்டரில் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பருல் யாதவ்வும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் 4 மொழி படப்பிடிப்புமே தற்போது பிரான்ஸ் நாட்டில் தனித்தனியாகத் தொடங்கியுள்ளது. இதற்காக நான்கு ஹீரோயின்களுமே தற்போது பிரான்ஸில் இருக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.