வி.வி. ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்யும் ஓவியா ஆர்மி; நிறைவேறுமா ஆசை?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆரதவை பெற்றவர் நடிகை ஓவியா. அதனால் ரசிகர்கள் ஓவியா ஆர்மி ஏற்படுத்தும் அளவுக்கு புகழ் பெற்றார்.

ஓவியா ஆர்மி தற்போது அதிகம் பேசுவது வி.வி.யை பற்றி தான்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் ரசிகர்கள் ட்விட்டரில் ஓவியா ஆர்மியை துவங்கி, ஓவியாவுக்கு எதிராக கருத்து கூறுபவர்களை கலாய்த்தும், ஓவியாவை பாராட்டியும் பேசுவதே ஓவியா ஆர்மியின் முழு நேர வேலையாக இருக்கிறது. இந்நிலையில் ஆர்மிக்காரர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது.

அது என்னெவென்றால், ஓவியா தளபதி விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான், அந்த ஆசையை தெரிவித்து #ViVi என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து வருகிறது. மேலும் விஜய்யுடன் ஓவியா புகைப்படத்தை இணைத்து  வெளியிட்டுள்ளனர்.

மேலும் அதில் கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல் அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும் என்றும்,   நான் உன்னை போன்ற பெண்ணை கண்டதில்லை என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை என்றும் ட்வீட் செய்துள்ளனர். 

ஓவியா ஆர்மியின் ஆசை நிறைவேறுமா? பொறுந்திருந்து பார்ப்போம்.