இந்திய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) அறிவித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் தொட் ருக்கு பின், இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் நவம்பர் 16ல் கொல்கத்தாவில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணியை எஸ்.எல்.சி.., இன்று அறிவித்துள்ளது.

இதில் தினேஷ் சண்டிமால் வழக்கம் போல கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்விக்கு பின் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்த ஏஞ்சலோ மாத்யூஸ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

தவிர, குசல் மெண்டிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இத்தொடருக்கு 41 வயதான திலன் சமரவீரா இலங்கையில் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி விவரம்: தினேஷ் சண்டிமால் (கேப்டன்), திமுத் கருணரத்னே, தனஞ்சயா டி சில்வா, சதேரா சமரவிக்ரீமா, ஏஞ்சலோ மாத்யூஸ், லகிரு திருமன்னே, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மால், தில்ரூவன் பெரேரா, லகிரு காமேஜ், லக்சன் சந்தகன், விஸ்வா பெர்னாண்டோ, தாசுன் சானகா, நிரோசன் திக்வெல்லா, ரோசன் சில்வா.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018