இந்திய அணிக்கு இனி ‘தல’ தோனி தேவையா? : லட்சுமண் விளக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி-20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வழி விட முன்வர வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ். லட்சுமண் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, ராஜ்கோட்டில் நடந்தது.

இதில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் இந்திய வீரர் தோனி, களமிறங்கியது முதலே தடுமாறினார். இதனால் தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து மீண்டும் தலை தூக்க துவங்கியது.

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமன் டி-20 போட்டிகளில் இருந்தாவது தோனி ஓய்வு பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து லட்சுமண் கூறுகையில்,’ இளம் வீரர்களுக்கு வழிவிட தோனி முன்வர வேண்டும். இதன் மூலம் எதிர் வரும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.’ என்றார்.அகார்கர் காட்டம்:

இதுகுறித்து அகார்கர் கூறுகையில்,’ ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் அனுபவம் அவசியம் தேவை, ஆனால் டி-20 போட்டிகளில் மற்ற பேட்ஸ்மேன்கள் போல தான் தோனியும். அவர் இல்லாத காரணத்தால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவரை தாண்டி வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க யோசிக்க வேண்டிய நேரம் இது.’ என்றார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018