மீண்டும் தமிழில் வனமகன் சாயிஷா!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த படம் வனமகன். இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் இந்தி நடிகை சாயிஷா.

அதன்பிறகு பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி இணைந்து நடிக்கயிருந்த கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் கமிட்டாகியிருந்தார் சாயிஷா. ஆனால் அந்த படம் இதுவரை தொடங்கப்படவில்லை. 

இந்த நிலையில், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ஜுங்கா படத்தில் சாயிஷா நடிப்பதாக கூறப்பட்டது. அதன்பிறகு அந்த படத்தில் மேயாதமான் பிரியா பவானி சங்கர் நடிப்பதாக இன்னொரு செய்தி வெளியானது.

தற்போது பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கயிருக்கும் படத்தில் சாயிஷா நடிக்கயிருப்பதாக ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. ஆக, கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவில் கார்த்தியுடன் டூயட் பாடயிருந்த சாயிஷா அது நடைபெறாத நிலையில், இப்போது பாண்டிராஜ் படத்தில் கார்த்தியுடன் இணையப்போகிறார்.