நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் தோல்வி: “பேட்டிங்கில் சோடை போய்விட்டோம்”

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, பேட்ஸ்மேன்கள் சோடைபோனதே காரணம் என்று கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 109 ரன்கள் (58 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் வங்காளதேசத்திற்கு எதிராக சதம் அடித்திருந்த முன்ரோ, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் இரண்டு சதங்கள் ருசித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி (65 ரன், 42 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் டோனி (49 ரன், 37 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோர் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த இலங்கை முன்னாள் வீரர் தில்ஷனை (1,889 ரன்) முந்திய விராட் கோலி (54 ஆட்டத்தில் 1,943 ரன்) தோல்வி குறித்து கூறியதாவது:-

நியூசிலாந்து வீரர்கள் தொடக்கத்தில் மிக அருமையாக பேட் செய்தனர். எங்களுக்குரிய வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டோம் என்பதே உண்மை. ஒரு கட்டத்தில் அவர்கள் 235 முதல் 240 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று நினைத்தேன். நல்லவேளையாக இறுதி கட்டத்தில் ஜஸ்பிரித் பும்ராவும், புவனேஷ்வர்குமாரும் கட்டுப்படுத்தி விட்டனர். கடைசி 5 ஓவர்கள் பந்து வீசிய விதம் மகிழ்ச்சி அளித்தது.

அதே சமயம் எங்களது பேட்டிங் போதுமான அளவுக்கு இல்லை. 200 ரன்கள் போன்ற இலக்கை துரத்திப்பிடிக்கும் (சேசிங்) போது, அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ஒரு 200 ‘ஸ்டிரைக் ரேட்’ வைத்திருக்க வேண்டும். அப்போது தான் இத்தகைய பெரிய ஸ்கோரை எட்டிப்பிடிக்க முடியும்.

நான் என்னால் முடிந்த வரை முயற்சித்தேன். டோனியும் கடைசியில் நன்றாக விளையாடினார். ஆனால் வெற்றிக்கு அதிக ஸ்கோர் தேவைப்பட்டதால் சிக்கலாக போய் விட்டது. சில நேரம் நல்ல பார்மில் இருப்பார்கள். ஆனால் எதிர்கொள்வதற்கு போதுமான பந்துகள் இருக்காது. ஆனாலும் பேட்ஸ்மேன்களை நான் ஆதரிக்கிறேன். இதே போல் பல முறை நமக்கு வெற்றியை தேடித்தந்த ஹர்திக் பாண்டயாவுக்கும் உறுதுணையாக இருக்கிறேன்.

13-14 ஓவர்களுக்கு பிறகு எதிரணிக்கு, பனியின் தாக்கம் இன்றி பந்தை சரியாக பிடித்து வீசுவதற்கு ‘கிரீப்’ கிடைத்தது. இருப்பினும் தோல்விக்கு இதை சாக்குபோக்காக சொல்லமாட்டேன். பேட்டிங்கில் நாங்கள் சோடை போய்விட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இவ்வாறு கோலி கூறினார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நிருபர்களிடம் கூறுகையில், ‘வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிக்கு (4 ஓவர்களில் 53 ரன்களை வாரி வழங்கினார்) இது தான் முதல் சர்வதேச போட்டி. சவாலான ஆடுகளத்தில் அதுவும் இது போன்ற அணிக்கு எதிராக பந்து வீசுவது எப்போதும் கடினமே. அவர் புதிய அணிக்குள் நுழைந்திருக்கிறார்.

இங்குள்ள நிலைமைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். இந்த ஆட்டத்தில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்வார். உங்களது பவுலிங் அடித்து நொறுக்கப்படும் போது, நிறைய கற்றுக்கொள்ள முடியும். தற்போது கிடைத்துள்ள அனுபவத்தில் இருந்து அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் அவர் சிறப்பாக செயல்படுவார்.

போட்டிக்கு முந்தைய நாள் நாங்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடாதது ஏன் என்று கேட்கிறீர்கள். நாங்கள் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் புத்துணர்ச்சி பெற ஓய்வு அவசியமாக இருந்தது. அதற்காக ஓட்டலில் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை. அங்கும் பயிற்சி செய்து கொண்டு தான் இருந்தோம். இந்த ஆட்டத்தில் ஜெயித்திருந்தால் இத்தகைய கேள்வி எழுந்திருக்காது’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ கூறுகையில், ‘முதல் ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுக்கு சாதனை படைத்த இந்திய ஜோடியான ரோகித் சர்மாவையும் (5 ரன்), ஷிகர் தவானையும் (1 ரன்) இந்த ஆட்டத்தில் சீக்கிரமே வெளியேற்றி, உத்வேகத்துக்கு அணை போட்டதே வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது. அவர்களது விக்கெட்டுகளை சாய்த்த டிரென்ட் பவுல்ட்டின் பந்து வீச்சு தாக்குதல் வியப்புக்குரிய வகையில் இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களும் அசத்தி விட்டனர்.

20 ஓவர் கிரிக்கெட்டை நான் ரசித்து அனுபவித்து விளையாடுகிறேன். ஒவ்வொரு முறையும் இது மாதிரி தான் ஆடுகிறேன். எப்படி விளையாடினாலும் 20 ஓவர் கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவையாகும்.’ என்றார்.

‘டோனியுடனான நட்புறவை பிரிக்க முடியாது’- கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் டோனியுடனான நட்புறவு தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது, ‘எனக்கும், டோனிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்த நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். அது தொடர்பான செய்திகளை நானும் சரி, டோனியும் சரி படிப்பது இல்லை.

எங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பவர்கள், எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார்கள். அவ்வாறான சமயத்தில், ‘அப்படி எங்களுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லையே’ என்று சொல்லி சிரித்துக் கொள்வோம். டோனியுடனான எனது நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது’ என்றார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018