ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் அதர்வா!

நடிகர் அதர்வா, இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘இவன் தந்திரன்3 ஆகிய படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். தற்போது இவர் நடிகர் அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசையமைத்த ரதன் இசையமைக்கவுள்ளார்., இந்தப் படத்தை ஆர்.கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனமும், எம்.கே.ராம்பிரசாத்தின் எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

இதுகுறித்து இயக்குனர் கண்ணன் கூறுகையில், ‘‘இந்தப் படம் ஆக்ஷனுக்கும், விறுவிறுப்புக்கும் குறையிருக்காது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகி மற்றும் துணை பாத்திரங்களில் தேர்வு விரைவில் தொடங்கவிருக்கிறது’’ என்றார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் திருநெல்வேலியில் தொடங்கவுள்ளது. இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.