காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் போட்டியில் (3 நிலை) தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் சத்யேந்திர சிங் 1,162 புள்ளிகளுடனும், சஞ்சீவ் ராஜ்புத், ஷைன்சிங் ஆகியோர் தலா 1,158 புள்ளிகளுடனும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.

இறுதிப்போட்டியில் சத்யேந்திர சிங் 454.2 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கமும், சஞ்சீவ் ராஜ்புத் 453.3 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கமும் வென்றனர். ஆஸ்திரேலிய வீரர் டானே சாம்சன் இறுதிப்போட்டியில் ஷைன்சிங்கை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

ஆண்களுக்கான டிராப் போட்டியில் பிரென்தீப் சோதி 125-க்கு 118 புள்ளிகள் குவித்து 6 பேர் கொண்ட இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப்போட்டியில் பிரென்தீப்சிங் 4-வது இடமே பெற்றார். இந்த போட்டி தொடரில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி உள்பட 20 பதக்கங்கள் வென்றது. 

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018