அனுஷ்கா நடிப்பில் ’பாகமதி’ ஃபர்ஸ்ட் லுக்; எதிர்பார்ப்பை கூட்டிய மாடர்ன் டே த்ரில்லர்!

அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘பாகமதி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அதேபோல் அவரது திருமணம் குறித்து வதந்திகள் பரவின. இந்நிலையில் அவரது அடுத்த படம் ‘பாகமதி’ குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக நானியை வைத்து, பிள்ள ஜமின்தார் என்ற தெலுங்கு படத்தை இயக்கியுள்ளார்.

இந்த சூழலில் ‘பாகமதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு கையில் ஆணி வைத்து அடிக்கப்பட்டது போலவும், மறுகையில் ரத்தம் சொட்டும் சுத்தியிலும் இடம்பெற்றுள்ளது.

பாகமதி’ திரைப்படம் மாடர்ன் டே த்ரில்லராக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அனுஷ்காவின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.