இந்தியா–நியூசிலாந்து மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது

இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2–வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனால் போட்டி தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும்.

முதலாவது ஆட்டத்தில் அரைசதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் 2–வது போட்டியில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். விராட்கோலி (65 ரன்), டோனி (49 ரன்) ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் தாக்குப்பிடித்து நின்று ஆடினார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணியின் பந்து வீச்சும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பீல்டிங்கிலும் இந்திய அணியினர் சொதப்பினார்கள்.

நியூசிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில் (45 ரன்), காலின் முன்ரோ (ஆட்டம் இழக்காமல் 109 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். காலின் முன்ரோ பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர்கள் மிட்செல் சான்ட்னெர், சோதி ஆகியோரும் விக்கெட் கைப்பற்றினார்கள்.

முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டதால் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த நியூசிலாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் நம்பர் ஒன் அரியணையில் அமர ஆர்வம் காட்டும்.

சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி எல்லா வகையிலும் முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டி நடைபெறும் கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியம் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். இதில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக திருவனந்தபுரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி அரங்கேற இருக்கிறது.

திருவனந்தபுரத்தில் நேற்று மழை பெய்தது. இதனால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இன்றைய போட்டி குறித்து கேரள கிரிக்கெட் சங்க செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் அளித்த பேட்டியில், ‘ஸ்டேடியத்தில் மழை நீர் வடிகால் வசதி சிறப்பாக உள்ளது. மழை பெய்தால் தண்ணீர பிழிந்து எடுக்கும் சூப்பர் சோப்பர் எந்திரங்கள் மூன்று தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்பட்டால் முழு மைதானமும் தார்ப்பாயால் மூடப்படும். போட்டியின் போது மழை குறுக்கிட்டாலும், மழை நின்ற 15 நிமிடங்களில் மைதானத்தை தயார்படுத்திட முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: காலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் (கேப்டன்), டாம் புரூஸ், கிளைன் பிலிப்ஸ், ஹென்றி நிகோல்ஸ், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிரென்ட் பவுல்ட், ஆடம் மில்னே, சோதி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்–1 சேனல் மற்றும் தூர்தர்‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018