தப்புக்கணக்கு போட்ட நியூசி., : நெத்தியடி குடுத்த இந்தியா: தொடரை கைப்பற்றி அசத்தல்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றி அசத்தியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டதால், ’டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ், அக்‌ஷர் படேல் ஆகியோருக்கு பதில் மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் சவுத்தி அணிக்கு திரும்பினார்.சொதப்பல் ‘பேட்டிங்’

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக ரன்கள் சேர்க்க தவற, இந்திய அணி, 8 ஓவரில் 5 விக்கெட்டுக்க் 67 ரன்கள் எடுத்தது.

புவனேஷ்வர் மிரட்டல்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே துவக்க வீரர் கப்டிலை (1) வெளியேற்றினார் புவனேஷ்வர். அடுத்த ஓவரில் பும்ரா, ஆபத்தான முன்ரோவை (7) வெளியேற்றினார்.பின் வந்த கேப்டன் வில்லியன்சன் (8) பாண்டியாவின் அசத்தல் ரன் அவுட்டில் வெளியேறினார். பிலிப்ஸ் (11) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை. நிகோலஸ் (2) ஏமாற்றினார். தொடர்ந்து நியூசிலாந்து அணி வெற்றிக்கு கடைசி ஓவரில், 19 ரன்கள் தேவைப்பட்டது.

பாண்டியா மிரட்டல்:

இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளை பாண்டியா மிரட்டலாக வீசினார். அடுத்த பந்தில் கிராண்ட்ஹோமே ஒரு இமாலய சிக்சர் விளாசினார். அடுத்த பந்தை ஒயிடாக வீசினார். அடுத்த இரண்டு பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்கப்பட கடைசி பந்தில் 1 ரன் மட்டும் எடுக்க, நியூசிலாந்து அணி, 8 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் டி-20 தொடரை கைப்பற்றி அசத்தியது.இந்தியா ‘50’

திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு மைதானம், சர்வதேச போட்டிகளை நடத்தும் இந்தியாவின் 50வது மைதானம் என்ற பெருமை பெற்றது.

* இதன் மூலம் அதிக மைதானங்களில் சர்வதேச போட்டிகளை நடத்திய நாடுகள் பட்டியலில் இந்தியா (50 மைதானங்கள்) முதலிடம் பிடித்தது.

* இப்பட்டியலில் இங்கிலாந்து (23), ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் (21) தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து (16), வெஸ்ட் இண்டீஸ் (15), இலங்கை (10), வங்கதேச (8) நாடுகள் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளது.

அபூர்வ ஒற்றுமை:

டி-20 தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, தவான் ஆகியோர் ஒரே ஓவரில் அவுட்டாகினர். முதல் போட்டியில் 17வது ஓவர், 2வது போட்டியில் 2வது ஓவர், இன்றைய போட்டியில் மூன்றாவது ஓவரில் இருவரும் அவுட்டாகினர். 

மூன்றாவது அணி:

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி, தனது 100வது டி-20 போட்டியில் பங்கேற்றது.இதன் மூலம் பாகிஸ்தான் (120 போட்டிகள்), தென் ஆப்ரிக்கா (100) அணிகளுக்கு பின் 100வது போட்டியில் பங்கேற்ற 3வது அணி என்ற பெருமை பெற்றது நியூசிலாந்து அணி.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018