‘இந்தியன் 2’ படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் இது. ஷங்கர் - கமல்ஹாசன் இருவரும் 20 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இணைந்துள்ளனர்.

‘இந்தியன் 2’ படத்துக்கு அனிருத் இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பொதுவாக, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள்தான் ஷங்கர் படத்துக்கு இசை அமைப்பார்கள்.  ஆனால், முதன்முறையாக அனிருத் இசையமைக்கப் போகிறார்.