திருமணமாகி ஒரு மாதத்தை ’ஹாட்டாக’ கொண்டாடடிய சமந்தா!

திருமணமாகி ஒரு மாதம் ஆனதை நடிகை சமந்தா உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

கோலிவுட், டோலிவுட் என இரண்டிலும் கலக்கியவர் நடிகை சமந்தா. இவர் கடந்த அக்டோபர் 6ம் தேதி இந்து முறைப்படி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். இந்நிலையில், தனக்கு திருமணமாகி ஒரு மாதம் நிறைவு பெற்றதை சமந்தா சிறப்பாக கொண்டாடியதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விருந்துக்காக நாக சைதன்யாவே சமையல் செய்துள்ளார். இது தொடர்பாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா, கணவருடன் நறுமணமான பாஸ்தா, வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது.’ என குறிப்பிட்டுள்ளார்.