ஹெட்ரிக் அரைச்சதங்கள் அடித்த உபுல் தரங்க.

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்யை போட்டியில், இலங்கை அணியின் உபுல் தரங்க மீண்டுமொரு அரைச்சதத்தை விளாசியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிக்கெதிரான இந்த போட்டியில், சில்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய உபுல் தரங்க 37 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதற்கு முதல் நடைபெற்ற டாக்கா டைனமிட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், தரங்க 3 போட்டிகளில் 170 ஓட்டங்களுடன் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய போட்டியில், சில்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் மற்றுமொரு வீரர் தனுஷ்க குணதிலக 22 பந்துகளில் 42 ஓட்டங்களை விளாசியதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சில்ஹெட் சிக்சர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜ்ஷாஹி கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டு தோல்வியடைந்தது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018