எல்லா மவுசு சிறிது காலத்திற்குதான்: எதை கூறுகிறார் இனியா?

மலையாள நடிகையான இனியா தமிழில் வாகை சூடவா, மௌன குரு போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். 

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தற்போது சினிமாவில் பிசியாகி விட்டார்கள். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆரம்பத்தில் பல நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதை சிலர் தவிர்த்து விட்டனர். 

இந்த லிஸ்டில் நடிகை இனியாவும் சேர்ந்துள்ளார். இனியா தனக்கு 4 முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வந்ததாக கூறியுள்ளார்.  

மேலும் அவர் இதில் எனக்கு விருப்பம் இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் மவுசு கொஞ்சம் நாளைக்கு தான். பின்னர் அவை மறைந்துபோகும் என கூறியுள்ளார்.