2020 டி20 உலகக்கோப்பை வரை டோனி விளையாடுவார்: ஆஷிஸ் நெஹ்ரா

2020 டி20 உலகக்கோப்பை வரை டோனியால் விளையாட முடியும் என்று சமீபத்தில் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக சுமார் 18 வருடங்கள் விளையாடிய ஆஷிஸ் நெஹ்ரா டெல்லியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்த டோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடித்து வருகிறார். ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்தியா 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கும்போது டோனி நிதானமாக விளையாடினார். அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை.

இதனால் டோனி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று லஷ்மண், அகர்கர் வலியுறுத்தினர். தற்போது ஆகாஷ் சோப்ராவும் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 2020 டி20 உலகக்கோப்பை வரை டோனியால் விளையாட முடியும் என்று ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.டி20 கிரிக்கெட்டில் டோனியின் நிலைகுறித்து ஆஷிஸ் நெஹ்ரா கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மூத்த நபர் தேவை. அதுபோன்றுதான் இந்திய அணியில் டோனி உள்ளார்.

அடுத்த இரண்டு மூன்று வருடம் அல்லது அவரது உடல்நிலை ஒத்துழைக்கும் வரை விளையாடுவார் என்று நம்புகிறேன். கிரிக்கெட் என்பது சூழ்நிலைக்கு ஏற்ற ஆட்டம். சிறப்பாக விளையாடுவது கடினமானதல்ல.

டோனி சரியாக விளையாடவில்லை. ஆனால் அணியில் இடம்பிடித்துள்ளார் என்று நான் செல்லமாட்டேன். டோனி சிறப்பாக விளையாடவில்லை என்றால், நான் ஓய்வு பெறுகிறேன் என்று முதன் நபராக கைது தூக்குபவர் அவராகத்தான் இருப்பார்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவெனில், டோனி குறித்த பேச்சை விட்டுவிட்டு, அவரை நாம் விளையாட விடவேண்டும்.நேர்மையான வீரர்களில் ஒருவர் டோனி. அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும். அவர் 2020 டி20 உலகக்கோப்பை வரை விளையாடலாம். வேகப்பந்து வீச்சாளரான நானே 39 வயது வரை விளையாடும்போது. டோனி அவரது உடற்தகுதி வைத்து உறுதியாக விளையாட முடியும்’’ என்றார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018