அனிருத்தின் அட்டகாசமான ‘இறைவா’ பாடல்: வீடியோ உள்ளே!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கியுள்ள படம் வேலைக்காரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார்.

வழக்கம்போல, இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்’ என்கிற பாடல் லிரிக் வீடியோ ஏற்கனவே யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘இறைவா’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆல்பம் பாடல் போல இந்த லிரிக் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியான இரண்டரை மணிநேரத்தில் 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 20 பேர் வரை லைக் செய்துள்ளனர்.