இந்தியாவின் சிறப்பான வரலாற்று தருணங்களில் ரகானே தொடர்ந்து பிடித்து வருகிறார்.
இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிகெட் தொடர் நடக்கிறது. இதில் இன்றைய போட்டியில் பங்கேற்கும் மும்பை அ,ணி தனது 500வது போட்டியில், பரோடா அணியை எதிர் கொள்கிறது.
இதற்கு முன்பாக இந்த சிறப்பான தருணத்தை மேலும் சிறப்பிக்க, நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மும்பையைச் சேர்ந்த ஜாம்பவான் சச்சின் பங்கேற்றார். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் ரகானே இடம் பெற்றார்.
இதன் மூலம் இந்தியாவின் இரண்டு சிறப்பான வரலாற்று தருணங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். மும்பை அணியின் 500வது ரஞ்சி போட்டி, முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச அளவிலான இந்திய அணியின் 500வது போட்டியிலும் ரகானே பங்கேற்றார். ஆனால் இன்றைய ரஞ்சிபோட்டியில் ரகானே ‘டக்’ அவுட்டானார்.