பயிற்சியில் ஜேக் பால் காயம் : இங்கிலாந்து அணிக்கு மற்றொரு பின்னடைவு

அடிலெய்டு: ஆஷஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால் காயமடைந்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 23ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்க உள்ளது. இதற்காக இங்கிலாந்து அணி முழுமையாக தயாராகி உள்ள நிலையில், வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால் கணுக்காலில் காயமடைந்தார். இதனால் இப்போட்டியின் எஞ்சிய 2 நாட்களிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீபன் பின் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகி உள்ளார். தற்போது ஜேக் பாலும் காயமடைந்திருப்பது இங்கிலாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, பென் ஸ்டோக்ஸ், டோபி ரோலண்ட் ஜோன்ஸ் ஆகியோரும் ஆஷஸ் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018