பாலா - துருவ் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான தலைப்பு வெளியாகி இருக்கிறது.சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் அறிமுகமாகிறார். 

பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு வர்மா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரேயா சர்மா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018