இதை எப்படி சிபிராஜ் கமலிடமிருந்து வாங்கினார்?

‘சத்யா’ பட தலைப்பை கமலிடம் இருந்து எப்படி வாங்கினோம் என சிபிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள படம் ‘சத்யா’. இது, 1988ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பு. கமல்ஹாசனே இந்தப் படத்தைத் தயாரித்திருந்ததால், அதன் உரிமை கமலிடம் உள்ளது. பின்னர் சிபிராஜ் படத்துக்கு இந்த தலைப்பு கிடைத்தது எப்படி? 

“நாங்கள் ஷூட்டிங் போகும்போது தலைப்பைப் பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால், ஷூட்டிங் நடக்க நடக்க, என்னுடைய கேரக்டருக்கு ‘சத்யா’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என எல்லோரும் சொன்னார்கள். ஆனால், கமல் சாரிடம் சென்று கேட்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. காரணம், ஏற்கெனவே ஒருவர் கேட்டபோது கமல் சார் அந்த தலைப்பைத் தரவில்லை. 

அப்புறம், என்னுடைய அப்பா சத்யராஜை இதில் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்று நினைத்தேன். காரணம் அப்பாவும், கமலும் நெருங்கிய நண்பர்கள். எனவே, புரொபஷனலாக அப்ரோச் செய்தோம். எங்களுக்கு தலைப்பு கிடைத்தது. கமல் சார் கையாலேயே ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது கூடுதல் சந்தோஷம்” என்கிறார் சிபிராஜ்.