ஒரு மாத நிறைவை கொண்டாடிய சமந்தா மற்றும் நாக சைதன்யா..!

திருமணம் முடிந்த பின்னர் தத்தம் பட வேலைகளில் இறங்கினார்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. சமீபத்தில் அவர்களது திருமணத்தின் ஒரு மாத நிறைவை அவர்களின் மனத்துக்குப் பிடித்த வகையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.


ஒரு மாத நிறைவை கொண்டாடிய சமந்தா மற்றும் நாக சைதன்யா..!


மேலும், நாக சைதன்யா காதல் மனைவியை மகிழ்விக்க சிறப்பு விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்தார். சமையலில் இறங்கி, பாஸ்தா உள்ளிட்ட சமந்தாவுக்குப் பிடித்தமான உணவுகளை அவரே சமைத்து அசத்தினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா, காதல் கணவருடன் நறுமணமான பாஸ்தா, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.