மிரட்டிய ‘மிஸ்டர் 360’ டிவிலியர்ஸ் : டி-20 அரங்கில் மற்றொரு சாதனை!

தென்ஆப்பிரிக்காவின் ராம் ஸ்லாம் டி20 கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல்., தொடரைப்போல, தென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 கிரிக்கெட் தொடர் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. 

நேற்று நடந்த லீக் போட்டியில் டைட்டன்ஸ், லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லயன்ஸ் அணி 15 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்த போது மழைக்குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. பின் டைட்டன்ஸ் அணிக்கு 15 ஓவரில் 135 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய டைடன்ஸ் அணிக்கு குயிண்டான் டி காக் (39 ) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த டி வில்லியர்ஸ், தனது வழக்கமாக ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தி, 19 பந்தில் அரைசதம் விளாசினார்.கேப்டன் அல்பி மோர்கல் (41) இவருக்கு நல்ல கம்பெனி கொடுக்க, டைட்டன்ஸ் அணி 11.2 ஓவரில் இலக்கை எட்டியது. இதன் மூலம் டைட்டன்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டு சிக்சர்:

இப்போட்டியில் 17 பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த டிவிலியர்ஸ், சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க வீரர் என சாதனை படைத்த தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவின் பந்தில் அடுத்ததடுத்து இரண்டு சிக்சர் அடித்து தனது அரைசததை பூர்த்தி செய்தார். இப்போட்டியில் டிவிலியர்ஸ் மொத்தமாக 5 சிக்சர்கள் விளாசினார்.

தவிர, டி-20 அரங்கில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டிவிலியர்ஸ் 7வது இடம் பிடித்து அசத்தினார்.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018