சமூகமயப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள்

திருகோணமலையில் சமூகமயப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்கள் 26 பேரிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

புனர்வாழ்வு ஆணiயாளர் நாயக பணியகத்தினால் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் , வழங்கப்படும் உதவிகளை சரியாக பயன்படுத்தி முகாமை செய்து வாழ்க்கையில் உயர் நிலைக்கு வர வேண்டும் என்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா தெரிவித்தார்.

 

உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எங்களால் முடியுமான உதவிகளை வழங்க நாம் தயாராகவுள்ளோம். சிறு உதவியாக நாம் உதவிகளினை வழங்கினாலும் அதனை சரியாக பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை நீங்கள் பெறமுடியும்.


முன்னர் நாம் இருவரும் ஓன்றாக யுத்தம் செய்தோம். இன்று நாங்கள் உங்களுக்கு உதவுகின்றவர்களாக இருக்கின்றோம். உங்களது முன்னேற்றத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எதிர்வரும் காலத்தில் சமூகமயப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் .


எமக்கு இப்பிரதேசத்திற்கு தேவையான கால்நடைகளை உங்களுக்கு பெற்றுத்தருவதில் சிரமம் காணப்படுகின்றது. காரணம் அதற்குறிய கால்நடைகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமமே. உரிய கால்நடைகள் இருப்பின் எமக்கு அறியத்தரவும் என்று இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்னாயக்க தெரிவித்தார்.


ஒருவரிற்கு இரு ஆடு என்றடிப்படையில் 18பேரிற்கு 36 ஆடுகளும் தலா ஒருவரறிற்கு ஒரு மாடு என்றடிப்படையில் 06 பேரிற்கு 06 பால் மாடுகளும் இதன்போது வழங்கப்பட்டன.


இந்த நிகழ்வில் புனர்வாழ்வு ஆணiயாளர் நாயக பணியக அதிகாரிகள் திருகோணமலை மாவட்ட புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான சமூக பொருளாதார மற்றும் நலன்புரி அலுவலக இணைப்பு அதிகாரி மேஜர் எச்.எஸ்.டி.பெரேரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018