மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை நாளை சமர்ப்பிப்பு

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக காலாந்தர மீளாய்வு செயற்குழுவில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கை சார்பாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு இதில் கலந்து கொள்ளவுள்ளது.


அனைத்துலக காலாந்தர மீளாய்வு என்பது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் சகல நாடுகளினதும் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையை ஏனைய பிற உறுப்பு நாடுகளினால் மீளாய்வு செய்யப்படுவதை குறிக்கின்றது.

 

இது 2006ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படுகிறது. உறுப்பு நாடுகள், சம்பந்தப்பட்ட நாட்டின் மனித உரிமைகள் பற்றிய பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளன. பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவோ, அதனை பதிவு செய்து கொள்வதற்கோ சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வாய்ப்பு காணப்படுகிறது. 

 

இலங்கை 2008ஆம், 2012ஆம் ஆண்டுகளில் அனைத்துலக காலாந்தர மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018