நமீதாவின் திருமண பத்திரிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகிறது!

நடிகை நமீதாவின் திருமணம் திருமணம் 24–ந் தேதி நடக்கிறது அவரது திருமண பத்திரிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகிறது!தமிழ் பட உலகில் பிரபல நடிகையாக இருக்கும் நமீதா குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர்.

15 வயதிலேயே சூரத் அழகியாக தேர்வாகி திரையுலகுக்கு வந்தார். 2002–ம் ஆண்டு ‘சொந்தம்’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 2004–ல் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

‘ஏய்’ படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்தார். சாணக்யா, பம்பரக்கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், பச்சக்குதிரை, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவனில்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, சண்டை, பாண்டி, பெருமாள், தீ, ஜெகன்மோகினி, குருசிஷ்யன், இளைஞன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பரத்துடன் பொட்டு, மற்றும் மியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நமீதா புதுமுக நடிகர் வீரேந்திரா என்ற வீராவை மணக்கப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

வீரா ‘மாடல்’ ஆக இருக்கிறார். ‘மியா’ படத்தில் நமீதாவும் வீராவும் இணைந்து நடித்து வந்தனர். அப்போது இருவரும் நெருங்கி பழகி காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதை வீடியோவில் பேசி நமீதா வெளியிட்டு இருக்கிறார்.

அதில் மணமகன் வீராவை அறிமுகப்படுத்தி ‘‘நானும் மணப்பெண்ணாகப் போகிறேன். எங்கள் திருமணம் 24–ந் தேதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, ‘‘திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிக்க வீரா அனுமதி அளித்துள்ளார்’’ என்றார்.

தற்போது  இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவர்களின் திருமண வரவேற்பு 22ம் தேதி திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறவுள்ளது. அதையடுத்து நவம்பர் 24ம் தேதி வெள்ளிக்கிழமை இஸ்கான் கோவிலில் காலை இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.

நமீதாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. விழாக்களில் ‘‘மச்சான்ஸ்’’ என்று இவர் அழைக்கும்போது ரசிகர்கள் ஆரவாரத்தோடு கரவொலி எழுப்புவது உண்டு.

தற்போது நமீதாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஜவுளி கடைகள், நகைக்கடைகள் திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். வெளிநாடுகளில் நடக்கும் நட்சத்திர கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சூரத்தில் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் கட்டுமான தொழிலும் ஈடுபட்டு வருகிறார்.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018