வெளி நாடுகளுக்கும் பண பரிவர்த்தனை: கைது செய்யப்படுவாரா விவேக்?

சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப் பிரியா ஆகியோர், பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதோடு, போலியாக நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம், பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின், புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றியிருக்கும் விவரங்களை வருமான வரித் துறையினர் கண்டறிந்துள்ளதோடு, வெளி நாட்டு பண பரிவர்த்தனைகளையும் முறைகேடாக பயன்படுத்தியுள்ள விவரங்களும் தெரிய வந்துள்ளன.

இதையடுத்து, விவேக் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, பல மணி நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

அப்போது, அவரிடம் இருந்தே ஏராளமான விவரங்களை வருமான வரித் துறையினர் கறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.விசாரணையில் விவேக்கிடம் பெற்ற தகவல்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, அமலாக்கத் துறை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் பரவி இருக்கிறது.

இதன் அடுத்த கட்டமாக, அமலாக்கத் துறையினர், விரைவில் களம் இறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமலாக்கத் துறை களம் இறங்கினால், விவேக் கைதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவேக்கைப் போலவே, அவரது சகோதரி கிருஷ்ணப் பிரியாவும் இப்படி பண பரிவர்த்தனைகளை முறைகேடாக செய்துள்ளதை, வருமான வரித் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அவரிடமும் வருமான வரித் துறையினரின் விசாரணை தொடர்ச்சியாக நடக்கிறது. அவர் தொடர்பான விசாரணை தகவல்கள் அனைத்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு விரைவில் பரிந்துரைக்கப்படும் எனவும் வருமான வரித் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

தேவையானால், அவர் மீதும் அமலாக்கத் துறை வழக்குப் போட்டு அவரையும் கைது செய்யலாம் எனவும், வருமான வரித் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.இந்த விவரம், விவேக் மற்றும் கிருஷ்ணப் பிரியா ஆகியோரின் குடும்பத்தினருக்கு தெரிய வர, அவர்கள் ஆடிப் போய் இருப்பதாக தெரிகிறது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018