கோவையில் ஆளுநர் ஆய்வு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன் சாடல்

கோவை மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் பன்வாரிலால் புரோஹித். இவர் இன்று கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் , காவல்துறை ஆணையர் அமல்ராஜ், வருவாய்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.

ஸ்மார்ட் சிட்டிகள் பட்டியலில் கோவை இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நடக்கும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறியவே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று மாவட்ட அதிகாரிகளை மட்டும் சந்தித்துள்ள ஆளுநர் நாளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி தலைவர்களோடும் ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கோவை மாவட்டத்தில் ஆளுநர் திடீர் ஆய்வு மேற்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை எந்த ஆளுநரும் மாவட்ட நிர்வாகத்தில் தலையிட்டது இல்லை என்றார்.

ஆனால் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு உரிமை இல்லை என்று எந்த சட்டமும் இல்லை, ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார்.


 

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018