மதுக்கடைகளை அகற்ற தீவிர போராட்டம் : ராமதாஸ் அறிக்கை

மதுக்கடைகளை அகற்ற தீவிர போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்த விதிக்கப்பட்ட தடை நகர் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும், அப்பகுதிகளில் மதுக்கடைகளை தாராளமாக நடத்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் விளக்கமளித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த விளக்கம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பு சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். 

நெடுஞ்சாலைகள் எனப்படுபவை மாநகரங்களையும், நகரங்களையும், கிராமங்களையும் இணைப்பவைதான். நகர பகுதிகளுக்குள் செல்லும் நெடுஞ்சாலைகளில் உரிமம் பெற்று அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை 2016ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி அளித்த தீர்ப்பு தடை செய்யவில்லை.

இது நாடு முழுவதும் உள்ள நகரப் பகுதிகளுக்கு  பொருந்தும்’’ என்று கூறித்தான் நகரப்பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த இரு தீர்ப்புகளுக்கும், இயற்கை நீதிக்கும்  எதிராக உள்ளது. 

தமிழகத்தில் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதற்கான முயற்சியில் சிறிய பின்னடைவு   ஏற்பட்டிருக்கிறது.

மதுவை ஒழித்து மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நோக்கம். அதிலிருந்து பாமக ஒருபோதும் பின்வாங்காது. தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அதை உணர்ந்து மதுவுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை பாமக  நடத்தும் என்றார்.  

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018