டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கும் விவகாரம் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில் எடப்பாடி  பழனிசாமி அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகள் அரசின் பொறுப்பற்ற தன்மையை  காட்டுவதாக உள்ளது என மிக கடுமையாக உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 

பித்தலாட்டத்தையும், மோசடி தனத்தையும் தன் இரண்டு கண்களாக கொண்டு செயல்படும் எடப்பாடி தலைமையிலான அரசு வழக்கம் போல மோசடி  தனம் என்று தனது 420 அக்மார்க் குணத்தை நீதிமன்றத்திலும் காட்டியுள்ளது.

டாஸ்மாக் கடைகளை திறக்கும் முயற்சியில் சென்னை உயர்நீதிமன்றம்  விளக்கம் கேட்டதாக பொய்யான, மோசடியான தகவலை தமிழக அரசு நேற்று  உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ததற்கு சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. எடப்பாடி அரசின் இந்த வேலை தமிழக மக்களுக்கு  அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் ஜெயலலிதா வகுத்த பாதையில் செல்லாமலும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமலும் இந்த அரசு செயல்பட்டு  வருகிறது.

420 என்று இவர்களை விமர்சனம் செய்தால் ஆத்திரம் கொண்டு வானத்திற்கும், பூமிக்கும் துள்ளிகுதித்து புனிதர்கள் போல் பொங்கினார்கள்.  இன்று இவர்களது மோசடி தனத்தை உயர்நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. எடப்பாடி தலைமையிலான இந்த அரசு விடைபெறும் நாளை தமிழகம்  ஆவலோடு எதிர்பார்க்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018