காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யும்

காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் உருவான மேகக்கூட்டங்கள் பெரும்பாலும் நிலப்பகுதியை நோக்கி நகரவில்லை.

இதனால் கடலுக்குள் கடந்த 2 தினங்களாக மிக பலத்த மழை பெய்தது. நிலப்பகுதியில் கடற்கரையையொட்டிய பகுதிகளான சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் சில இடங்களில் மட்டும் கனமழை பெய்தது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றும் நீடித்தது. இதன் காரணமாக மேற்கண்ட 3 மாவட்டங்களில் 2வது நாளாக விடிய, விடிய மழை பெய்தது. சில நேரங்களில் கனமழை பெய்தது.

தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் சென்னையின் பல இடங்களில் விட்டு, விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று அதிகபட்சம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 7 செ.மீ மழை பதிவானது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்க கடலில் இருந்து நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டது. இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும். 

காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதேசமயம், இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என்றும் அவர் தெரிவித்தார். பருவமழை 11 சதவீதம் குறைவு: வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை 44 செ.மீ இயல்பாக மழை பெய்ய வேண்டும்.

நேற்று வரை தமிழகத்தில் 28 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 24.8 செ.மீ மழை தான் பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 7 சதவீதம் குறைவு ஆகும். அதிக மழை பெய்ததில் நாகை மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அங்கு இதுவரை 69 சதவீதம் அதிகம் மழை(45 செ.மீ) பெய்துள்ளது.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018