காலஞ்சென்ற பேராசிரியர் குணபால மலலசேக்கரவின் ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

காலஞ்சென்ற பேராசிரியர் குணபால மலலசேக்கரவின் ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் குணபால மலலசேக்கரவின் வாழ்க்கை வரலாறு தற்போதைய தூதுவர்கள் உள்ளிட்ட தூதுவராலயங்களின் உறுப்பினர்களுக்கு சிறந்தவொரு முன்னுதாரணமாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

பண்டாரநாயக்கவின் மத்தியஸ்த வெளிநாட்டுக் கொள்கையினை முன்னோக்கி கொண்டு செல்வதில் குணபால மலலசேக்கரவின் அர்ப்பணிப்பினை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

 

தேசத்தின் கௌரவத்தை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற மலலசேக்கர், நாட்டிற்கு கீர்த்தியைப் பெற்றுக்கொடுத்த ஈடிணையற்ற கல்விமான் ஆவார்.

 

1957ஆம் ஆண்டில் வெளிநாட்டு தூதரக சேவையில் நியமிக்கப்பட்ட குணபால மலலசேக்கர , அதன்பின்னர் உலக பௌத்த மகா சம்மேளனத்தின் முதலாவது தலைவராகவும் யுனெஸ்கோ அமைப்பின் லும்பினி மறுசீரமைப்பு குழுவின் தலைவராகவும் செயற்பட்டார்.

 

உலகளாவிய மற்றும் பிராந்திய சம்மேளனங்கள் பலவற்றிலும் அங்கம்வகித்த மல்லசேக்கர, உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்களில் உறுப்புரிமையைக் கொண்டிருந்ததுடன் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றி நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

 

குணபால மலலசேக்கரவின் செயற்பணியைப் பாராட்டியதுடன் மலலசேக்கரவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

 

அதன்பின்னர் குணபால மலலசேக்கரவின் வாழ்க்கை வரலாறு உள்ளடங்கிய 'பேராசிரியர் குணபால மலலசேக்கர – மறுமலர்ச்சியின் முன்னோடி' எனும் நூல் குணபால மலலசேக்கர அமைப்பின் தலைவர் விஜய மலலசேக்கரவினால் ஜனாதிபதியிடம்; கையளிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் ஸியாமோபாலி மகா நிக்காயவின் கோட்டே ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கர் பேராசியர் கொட்டபிட்டியே ராகுல தேரர், பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெல்லன்வில விமலரத்தன தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, அனுர பிரியதர்ஷன யாப்பா, காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோரும் புத்திஜீவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018