பாஸ்போர்ட் முடக்கம், 3 துப்பாக்கிகள் சிக்கின மிரட்டி குறைந்த விலைக்கு விவேக் குவித்த சொத்துக்கள் : திடுக்கிடும் தகவல்கள்

சென்னை: விவேக் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பல ஆவணங்கள், மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,  அவரது வீட்டில் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இந்தியா முழுவதும் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் பல போலி நிறுவனங்கள்,  செயல்பட முடியாமல், மூடப்பட்டன. அதில், சசிகலாவின் 4 போலி நிறுவனங்கள் மூடப்பட்டன. இது குறித்து விசாரணை நடத்தும்படி வருமான  வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. 

இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஐடி அதிகரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் 10 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1012.29 கோடிக்கு வரி ஏய்ப்பில்  ஈடுபட்டது தெரியவந்தது. இந்த போலி நிறுவனங்கள் சசிகலா, இளவரசி மற்றும் அவரது உறவினர்களின் பெயர்களில் இருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை  முதல் நேற்று முன்தினம் வரை வரை 5 நாட்கள் சோதனை நடத்தினர். அதில் டிடிவி தினகரனின் பண்ணை வீடு, திவாகரனின் வீடு, கல்லூரி,  இளவரசியின் மகனும், ஜெயா டிவி சிஇஓவான விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணப்பிரியா, ஷகீலா மற்றும் மாமா பாஸ்கர், கலியபெருமாள்,  டாக்டர் சிவக்குமார், விக்ரம், பாஸ்கரன், வெங்கடேஷ் உள்பட பல உறவினர்கள், பினாமிகளின் வீடுகளில் நடந்தது. தமிழகத்தில் மட்டும் 181  இடங்களில் சோதனை நடந்தது.

இந்தச் சோதனையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மிடாஸ் மதுபான தொழிற்சாலை, கோடநாடு டீ எஸ்டேட் ஆகியவற்றிலும் சோதனை நடந்தது. இந்தச்  சோதனையில் பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும், வாட்ச்மேன், கூலி வேலை செய்கிறவர்கள், தோட்ட தொழிலாளர்களின்  பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருப்பதும், அது அவர்களுக்கே தெரியாமல் நடந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் வெளிநாடுகளிலும் பண  பரிவர்த்தனை நடந்துள்ளது. வெளிநாடுகளிலும் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதற்கான, ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிடைத்தன. மேலும் ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தில் ஆரம்ப  முதலீடே ஆயிரம் கோடிக்கு செய்யப்பட்டிருந்தது. இது குறித்தும் முக்கிய ஆவணங்கள் வருமான வரித்துறையில் சிக்கின. இது குறித்து வருமான  வரித்துறை விசாரணை முடிந்ததும், விவேக்கை நேரடியாக அதிகாரிகள் தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து  விசாரணை நடத்தினர். அப்போது முதலீடுகள், வாங்கிக் குவித்த சொத்துக்கள் குறித்து விசாரித்தனர். ஆனால் எந்த விசாரணைக்கும் அவர் முறையாக  பதில் அளிக்கவில்லை. எல்லாம் என்னுடைய ஆடிட்டருக்குத்தான் தெரியும் என்று கூறி வந்தார். இதனால் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு  விடுவிக்கப்பட்டார்.

அதேபோல கோவையில் ஏராளமான இடங்களையும் மிரட்டி வாங்கியுள்ளனர். அதேபோல தென் மாவட்டங்களிலும் பல இடங்களில் சொத்துக்களை  தனியார் நிறுவனங்கள் பெயரில் சொத்துக்களை மிரட்டி வாங்கியுள்ளனர். இதேபோல மாநிலம் முழுவதும் பல நிறுவனங்கள், சொத்துக்கள் வாங்கி  குவித்திருப்பது தெரியவந்தது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது குறித்து விவேக்கிடம்  மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் ஜாஸ் சினிமாஸ் குறித்து 2 நாளில் விளக்கம்  அளிக்க வேண்டும் என்று விவேக்கிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கிடையில் விவேக் வீட்டில் நடத்தப்பட்ட  சோதனையில் 3 துப்பாக்கிகள் சிக்கியுள்ளன. 

அதில் 2 துப்பாக்கிக்கு உரிமம் வாங்கி வைத்துள்ளார். ஒரு துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்று கூறப்படுகிறது. இது குறித்தும் அதிகாரிகள்  ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பறிமுதல்  செய்துள்ளனர். மேலும் விவேக் மட்டுமல்லாமல் டாக்டர் சிவக்குமார், விக்ரம், திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த், கிருஷ்ணப்பிரியா, ஷகீலா,  கார்த்திகேயன் உள்பட பலரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைனத்து விமான நிலையங்களுக்கும் வருமான வரித்துறை  அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும் டாக்டர் சிவக்குமார், திவாகரன் ஆகியோரின் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் பறிமுதல்  செய்துள்ளனர்.

இதற்கிடையில் துப்பாக்கி சிக்கிய விவகாரம் குறித்து சென்னை போலீசில் புகார் அளிக்கலாமா? அல்லது சிபிஐக்கு அறிக்கை அனுப்பி விசாரணை  நடத்த கோரலாமா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாளில் இதற்கான  முறையான புகார் சிபிஐ அல்லது சென்னை போலீசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.  தற்போது பாஸ்போர்ட் முடக்கிய விவகாரம் மற்றும் துப்பாக்கி சிக்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்திரமாக வாங்கிய ஓட்டல்

விவேக் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் ஆவணங்கள் சிக்கின. அதில் அண்டை மாநிலத்தில் ஒரு ஓட்டலை  வாங்கியுள்ளனர். அந்த ஓட்டல் உரிமையாளர், தொழில் பிரச்னை காரணமாக ஓட்டலை விற்க முடிவு செய்தார். அப்போது ரூ.400 கோடி மதிப்புள்ள  ஓட்டலை, ரூ.320 கோடிக்கு வாங்கியுள்ளனர். அந்த பணத்தையும் செல்லாத ரூ.1000, ரூ.500ஆக கொடுத்துள்ளனர். இதனால் ஓட்டல் உரிமையாளர்  அதிர்ச்சி அடைந்து, இந்த நோட்டை நான் எப்படி மாற்றுவது ஏற்கனவே, நீங்கள் ரூ.80 கோடி குறைத்து வாங்கியுள்ளீர்கள் என்று கூறியுள்ளார். அப்போது  அவர்களே 25 சதவீதம் கமிஷன் எடுத்துக் கொண்டு செல்லாத நோட்டை மாற்றிக் கொடுத்துள்ளனர். அந்த 25 சதவீத கமிஷன் மட்டும் ரூ.80  கோடியாகும். மொத்தம் ரூ.160 கோடி ஓட்டல் உரிமையாளருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018