அரசாங்க ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் 15% அதிகரிப்பு

2018 வரவு செலவுத்திட்ட முன்மொழிசுக்கு அமைவாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பான 2018 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட முன்மொழிவுக்கு அமைவாக அலுவலக உதவியாளர் முதல் சட்டமா அதிபர் வரை சம்பளம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகின்றது.

 

அரசாங்க ஊழியர்களின் இச்த சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கான கொடுப்பனவுக்காக அரசாங்கம் மேலதிமாக 12பில்லியன் ரூபாவை வருடாந்தம் செலவிடப்படவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பின் நான்காம் நாள் விவாதத்தில் இதனை விபரித்தார்.


அரசாங்கத்துறையில் அலுவலக உதவியாளர்கள் தொடக்கம் ஆகக் கூடுதலாக சம்பளம் பெறும் சட்டமா அதிபர் வரையில் இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெறவுள்ளது.

 

இதற்கமைவாக அலுவலக ஊழியரின் அடிப்படை சம்பளம் 14 ஆயிரம் ரூபாவில் இருந்து 23 ஆயிரம் ரூபாவாகவும் , சட்டமா அதிபரின் சம்பளம் 1இலட்சத்து 10ஆயிரம் ரூபா வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது.


விசேட வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 60 ஆயிரம் முதல் 69 ஆயிரத்து 756 ரூபா வரை அதிகரிக்கப்படுகின்றது.

 

2016 ஆம் ஆண்டில் அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 17450 ரூபாவாகும். 2017 ஆம் ஆண்டில் இவர்களது சம்பளம் 20575 ரூபா ஆகும். 2018 ஆம் ஆண்டில் இவர்களது சம்பளம் 23600 ஆகவும் அதிகரிக்கும்.


இந்த நடைமுறையின் கீழ் அலுவலக உதவியாளரின் சம்பளம் அடுத்த வருடத்தில் 3075 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது.


சட்டமா அதிபரின் சம்பளம் 2018 ஆம் ஆண்டில் 110,000 வாகவும் அமைந்திருக்கும் இவரது சம்பளம் 13,000 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar