ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு…

மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களை அழைத்து சென்ற இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.

இதனிடையே இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே துப்பாக்கி சூட்டை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவருக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.