எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு கார­ண­மான பின்­ன­ணியைக் கண்­ட­றி­வ­தற்கு ஜனா­தி­பதி நட­வ­டிக்­கை­ மேற்­கொள்­ள­வேண்டும்

நாட்டில் ஏற்­பட்ட எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு கார­ண­மான பின்­ன­ணியைக் கண்­ட­றி­வ­தற்கு  குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ரணை  நடத்­தப்­ப­ட­ வேண்டும். இதற்­கான நட­வ­டிக்­கை­யினை  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  மேற்­கொள்­ள­வேண்டும் என்று  பெற்றோ­லிய வளத்­துறை அமைச்சர்  அர்­ஜுன ரண­துங்க அமைச்­ச­ர­வையில் கோரிக்கை விடுத்­துள்ளார்.  




எரி­பொருள் தட்­டுப்­பாடு குறித்து  பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் முன்னாள் அமைச்­சர்­களை  குற்­றம்­ சாட்­டி­யமை தொடர்பில்  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கடும் வாதப்­பி­ர­தி­வா­தங்­களும்  இடம்­பெற்­றுள்­ளது. 


ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் நேற்று   ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் நடை­பெற்­றது.  இதன்­போது  நாட்டில் கடந்­த­வாரம் ஏற்­பட்ட எரி­பொருள் தட்­டுப்­பாடு  குறித்து ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட  மூன்று  அமைச்­சர்­களைக் கொண்ட குழு­வா­னது தமது அறிக்­கை­யினை  ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­துள்­ளது.  


இத­னை­ய­டுத்து  முன்னாள்  பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் சந்­திம வீர­கொ­டிக்கும்,  அமைச்சர் அர்­ஜுன ரண­துங்­க­விற்­கு­மி­டையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது.  அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க  முன்னாள்  பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்­சர்­களை குற்­றம்­சாட்டி  சிங்­களப் பத்­தி­ரி­கையில் பேட்­டி­ய­ளித்­துள்­ளமை குறித்து  இங்கு சர்ச்சை எழுப்­பப்­பட்­டது.  பத்­தி­ரி­கையை காண்­பித்த  அமைச்சர் சந்­திம வீரக்­கொடி  அமைச்சர்  அர்­ஜுன ரண­துங்­கவின் செயற்­பாடு  தவ­றா­ன­தாகும். இதனால் எமக்கு பெரும் அவ­ம­ரி­யாதை ஏற்­பட்­டுள்­ளது என்று கடும் விசனம் தெரி­வித்­துள்ளார். 


இதற்கு ஆத­ர­வாக  முன்னாள்  பெற்­றோ­லி­வளத் துறை அமைச்­சர்­க­ளான  அநு­ர ­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரே­ம­ஜ­யந்த  ஆகி­யோரும்  குரல்­கொ­டுத்­துள்­ளனர்.   இதற்கு விளக்­க­ம­ளித்த  பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர்  அர்­ஜுன ரண­துங்க குறித்த பத்­தி­ரி­கைக்­கான பேட்­டியின் போது ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர்  தமக்கு எத்­த­கைய அழுத்­தங்­க­ளையும் கொடுக்­க­வில்லை என்று கூறி­ய­தா­கவும், வேறு அமைச்­சர்­களைப் பற்றி கூற­வில்லை என்றும்  எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.  


இந்த சர்ச்சை நீடித்­த­தை­ய­டுத்து   தலை­யிட்ட ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  இவ்­வி­டயம் தொடர்பில் குறித்த பத்­தி­ரி­கைக்கு  அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க மறுப்பு தெரி­விக்­க­வேண்டும் என்று அறி­வு­றுத்­தினார்.  


இத­னை­விட  எரி­பொருள் தட்­டுப்­பாடு குறித்து ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட மூன்­று­பேர்­கொண்ட அமைச்­சர்கள் குழுவை உட­ன­டி­யாக கலைக்­காது அந்த  சம்­பவம் தொடர்­பான முழு­மை­யான விட­யத்தை கண்­டு­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும் ஜனா­தி­பதி  இங்கு உத்­த­ர­விட்­டுள்ளார். 


இத­னை­ய­டுத்து  எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான பின்னணியை கண்டறிவதற்கு  குற்றப்புலனாய்வு  பிரிவினரின்  விசாரணையை  ஆரம்பிக்க வேண்டுமென்றும்  அதற்கான நடவடிக்கை  எடுக்கப்படவேண்டுமென்றும்  அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று   ஜனாதிபதி உறுதியளித்தார். 

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017