பணியுமா? பாயுமா? இலங்கை அணியுடன் இன்று முதல் டெஸ்ட்

இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.

அண்மையில் இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இலங்கை அணி சொந்த மண்ணில் முழுமையாக ஒயிட் வாஷ் செய்து மண்ணைக் கவ்வ வைத்தது. இத்தொடருக்குப் பின் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் விளையாடி அதிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே இலங்கை அணி இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்து நொந்த போன நிலையில் பாகிஸ்தான் அணியுடனான தொடரில் பங்கேற்றது. அதில் டெஸ்ட் தொடரை 2-0 என் வென்றாலும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் 5-0 மற்றும் 3-0 என மீண்டும் ஒயிட் வாஷ் தோல்வியை அடைந்துள்ளது.முன்னதாக, ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஜிம்பாவேயிடம் ஒருநாள் தொடரை பறிகொடுத்துள்ளது இலங்கை அணி. இப்படி எல்லா அணிகளிடமும் அடிவாங்கி சோர்ந்து போகியிருக்கும் இலங்கை அணி மீண்டும் இந்தியாவில் சுற்றுப்பயணத்திற்கு வந்துள்ளது.

முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பின் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. இன்று கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த முறை அந்த அணியின் கேப்டனாக இளம் வீரர் சந்திமால் பொறுப்பேற்றுள்ளார்.

அவருடன் அனுபவ வீரர் மேத்யூஸ், சுழற்பந்துவீச்சாளர் ஹெராத் ஆகியோரை பெரும் நம்பியுள்ளது அந்த அணி.விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி மேல் வெற்றி பெற்று அசத்தி வருகிறது. இத்தொடரிலும் இலங்கை அணியை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பும் உத்வேகத்துடன் காத்திருக்கிறது. அஸ்வின், ஜடேஜா கூட்டணி மீண்டும் விக்கெட் வேட்டைக்குக் காத்திருக்கிறது.

ஈடன் கார்டன்ஸ் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது. இதனால் இரு அணிகளும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் உமேஷ் யாதவ், சமி ஆகியோருடன் ஆல் ரவுண்டராக வளர்ந்து வரும் புவனேஷ்வர் குமாருக்கும் வாய்ப்பு கிடைக்க இடம் இருக்கிறது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018