அறம் இரண்டாம் பாகம்; ஓகே சொன்ன நயன்தாரா

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'அறம்' திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு  கிடைத்துள்ளது.

இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்து  வருகின்றன.அறம் படம் வெளியான திரையரங்கங்கள் அனைத்திலும் ரசிகர்களின் ஆதரவால் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டும் இன்றி படத்தில் பேசப்பட்டிருக்கும் சமூக உள்ளடக்கத்துக்கும் பல்வேறு தரப்பினர் தங்களது  பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் ரஜினி, கோபியை போனில் தொடர்பு கொண்டு "அறம் படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்ததாகவும், என்ன இப்படியொரு படம்னு ஆடிப் போயிட்டேன். வாழ்த்துகள், காட் ப்ளஸ் யூ என்று பாராட்டியிருக்கிறார். 

தியேட்டரில் நேரில் சென்று பார்த்த நயன்தாரா படத்துக்கு ஆடியன்ஸ் தரும் ரெஸ்பான்சை பார்த்து மிரண்டு விட்டார். அன்று மாலையே கோபி நயினாரை அழைத்து அறம் இரண்டாம் பாகத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க உடனே வேலையை  ஆரம்பித்து விடலாம் என்று கூறிவிட்டாராம். இதனால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர்.

அறம் படத்தில் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்யும் கலெக்டர் மதிவதனி மக்களுடன் களம் இறங்கி போராடுகிற அரசியல் போராளியாக இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளாராம். அறம் இரண்டாம் பாகத்தில் காமெடி இருக்குமாம். அதாவது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற படமாக  இருக்கும் என தெரிவித்துள்ளார் கோபி நயினார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018