எம்.ஆர்.டி இரயிலில் வெளிநாட்டவரை தாக்கிய 71 வயது சிங்கப்பூரியர்!

கடந்த ஏப்ரல் மாதத்தில், எம்.ஆர்.டி இரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஆடவரைத் தாக்கியதாக சிங்கப்பூரைச் சேர்ந்த 71 வயது ஆடவர் ஒருவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியன்று ஃபெர்ரர் பார்க் எம்.ஆர்.டி நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரயிலில், ஜோசப் ஃபிலின் டி மரினி என்ற ஆடவரை கான் தியான் சூ தகாத வார்த்தைகளில் திட்டினான். ஐந்து நிமிடங்கள் கழித்து, டி மரினியின் தலைப் பகுதியை தியான் சூ தாக்கினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாது, அந்த வெளிநாட்டவரை தகாத வார்த்தைகளால் திட்டும் போது தனது குரலை உயர்த்தி கோபத்தை வெளியிட்டு, அந்த இரயிலில் பயணித்துக் கொண்டிருந்த மற்ற பயணிகளுக்கு எரிச்சலை மூட்டினார் என்றும் அந்த 71 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

மனநல மருத்துவ கழகத்தின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள கான், தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு டிசம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு உட்படுத்தப்படும். 

எம்.ஆர்.டி இரயிலில் நிகழ்ந்த இச்சம்பவம், சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. கானின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது 6 மாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018