தமிழ் இளைஞர்கள் சித்தரவதை மறுப்புக்கு யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்!

இலங்கைப் படையினர் பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன மறுப்பு வெளியிட்டமைக்கு உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேச அமைப்பின் ( International Truth and Justice Project) தலைவர் யஸ்மின் சூக்கா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அசோசியேட் பிறஸ் (Associated Press) என்ற செய்தி நிறுவனத்திற்கு கனடா வன்கூர் மாநிலத்தில் வைத்து வழங்கிய சிறப்பு நேர்காணலில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன மறுப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த மறுப்புத் தொடர்பாக அசோசியேட் பிறஸ் செய்தியாளர் உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேச அமைப்பின் தலைவர் யஸ்மின் சூக்காவிடம் தொடர்பு கொண்டு கேட்டார்.

அதற்கு கண்டனம் வெளியிட்ட யஸ்மின் சூக்கா பெறுப்பற்ற பதில் என்று தெரிவித்துள்ளார். சித்திரவதை இடம்பெற்றது என்று குற்றம் சுமத்தப்பட்ட, அறிக்கை வெளியாகி ஒரு வாரத்தில் நம்பகத்தன்மையுள்ள விசாரணையை இலங்கை அரசாங்கம் நடத்தியிருக்கும் என்பதை ஏற்க முடியாது.

நீதிப் பொறிமுறைகள் குறித்த இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய நிலைப்பாடுகள் காரணமாகத்தான் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளக பொறிமுறைகளை நிராகரிப்பதாக யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டினார்.

அதேவேளை கபில வைத்தியரட்ன அசோசியேட் பிறஸ் செய்தி நிறுவனத்திற்கு வெளியிட்ட முழுமையான கருத்து பின்வருமாறு,

படையினர், பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையும், ஆதாரமும் அற்றவை. சித்திரவதை இடம்பெற்றதாக அசோசியேட் பிறஸ் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டதும், விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் படையினர் சித்திரவதைகளில் ஈடுபடவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாலியல் வன்முறை, சித்திரவதைகள் போன்றவற்றை சிறிதளவும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு. தமிழ் இளைஞன் ஒருவரின் முதுகில் பத்துக்கும் அதிகமான சூடுகள் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை உண்மைக்கு மாறானது.

சிலவேளைகளில்தமிழ் இளைஞர்கள் சித்தரவதை மறுப்புக்கு யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்! அந்த இளைஞனின் நண்பன் முதுகில் சூட்டுக்காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கபில வைத்தியரட்ன அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

ஐம்பதிற்கும் அதிகமான இளைஞர்கள் இலங்கைப் படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக அசோசியேட் பிறஸ் செய்தி நிறுவனம் கடந்த வாரம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகில் அமைதியைக் காப்பதற்கான பாதுகாப்பு அமைச்சா்கள் மட்டத்திலான மாநாடு, கனடா வன்கூர் மாநிலத்தில் கடந்த 14, 15 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அங்கு கலந்துகொள்வதற்காக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜயரட்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன, உட்பட இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலரும் கனடாவுக்குச் சென்றிருந்தனர்.

அந்த மாநாட்டில் இலங்கையில் தொடர்ச்சியாக தமிழ் இளைஞர்கள் சித்தரவதை செய்யப்படுவதாக வெளியான தகவல்களை பாதுகாப்பு அமைச்சர் மறுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன என்று மேலும் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018