சசிகலா உறவினர் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனையில் 150 கம்ப்யூட்டர்கள் பறிமுதல்

சசிகலாவின் உறவினர், பினாமி வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையின்போது 150 கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சொத்து குவிப்பு குறித்து முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதைத் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியவர்கள் என்று 2 பட்டியலை அதிகாரிகள் தயாரித்துள்ளனர். அதில் சோதனை நடத்தப்பட்ட 140 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய  தலா 10 சாட்சிகள் உட்பட மொத்தம் 1540 பேரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் பட்டியல்களை தயாரித்துள்ளனர். சசிகலா, இளவரசி ஆகியோர் போலி நிறுவனங்களைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன.

அதைத் தொடர்ந்து, நடந்த விசாரணையில் 10 போலி கம்பெனிகள் மூலம் ரூ.1012 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்தது தெரியவந்தது. அதனால் சசிகலா மற்றும் இளவரசிக்கு வேண்டியவர்கள், வியாபார தொடர்பு உள்ளவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் சுமார் 140 பேரை தேர்வு செய்து அவர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில், பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும், வரி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும், பினாமிகளின் பெயர்களில் பல சொத்துக்கள் குவித்திருப்பதும் தெரியவந்தது. சொத்துக்கள் மட்டும் ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கின. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

இது குறித்து ஆதாரங்களுடன் வருமான வரித்துறைக்கு ஏராளமானபேர் புகார்களை அனுப்பியுள்ளனர். இது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் ஆய்வுகளை தொடங்கியுள்ளனர். அந்த ஆய்வில் பல பெரிய பெரிய தொழில் அதிபர்களும் பினாமியாக செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில்தான் பெரம்பூரில் உள்ள பின்னிமில், ஆர்.ஏ.புரத்தில் தொழில் அதிபர் ஒருவரின் 4.5 ஏக்கர் பங்களா ஆகியவற்றையும் பினாமி பெயரில் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதைத் தவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் அளவுக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.இதற்கிடையில், இந்த சொத்து குவிப்பு குறித்து இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகீலா அவர்களது கணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் மொத்தம் 140 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான தொழிற்சாலை, பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்கள், பினாமி கம்பெனிகள், தொழிற்சாலைகளில் மொத்தம் 150 கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கம்ப்யூட்டர்களில் ஏராளமான ஆவணங்கள், வரவு, செலவு கணக்குகள் இருப்பது தெரியவந்தது. அதை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் பலருக்கு விவேக் வட்டிக்கும் கொடுத்து வந்துள்ளார். அதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன. சில கம்ப்யூட்டர்களில் ரகசிய குறியீட்டுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் கம்ப்யூட்டர் ஆவணங்களை ஆராய்ந்து வருகின்றனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சோதனை நடத்தப்பட்ட 140 பேரிடமும் சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு, அதற்கான சம்மன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதைத் தவிர விசாரணை வளையத்துக்கள் சிக்கிய 140 பேருக்கு நெருக்கமாக இருந்தவர்கள், அவர்களுடன் வரவு, செலவு கணக்கு வைத்திருப்பவர்கள் என்று 1400 பேரின் பட்டியல்களையும் அதிகாரிகள் தயாரித்துள்ளனர். இதனால் இவர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதிலும் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பினாமிகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். ஓரிரு நாளில் பினாமிகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018