‘‘நந்தி விருதுகள் வழங்கியதில் ஆந்திர அரசு பாரபட்சம்’’ டைரக்டர்கள் கண்டனம்

நந்தி விருதுகளுக்கு நடிகர்–நடிகைகளை தேர்வு செய்ததில் ஆந்திர அரசு பாரபட்சமாக நடந்துள்ளதாகவும் பிரபாஸ் மற்றும் சிரஞ்சீவி குடும்பத்து நடிகர்களை ஒதுக்கி விட்டதாகவும் இயக்குனர்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சிறந்த படம், சிறந்த நடிகர்–நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் வழங்கும் நந்தி விருதுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. 2014 முதல் 2016 வரை மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து இந்த விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

சந்திரபாபு நாயுடுவின் உறவினரான பாலகிருஷ்ணா நடித்த ‘லெஜண்ட்’ படத்துக்கு 9 விருதுகள் வழங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விருதுக்கான தேர்வு குழுவில் பாலகிருஷ்ணா, நடிகை ஜீவிதா ஆகியோரும் நடுவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளதாக தெலுங்கு இயக்குனர்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

டைரக்டர் பன்னிவாசு கூறும்போது, ‘‘நந்தி விருதுக்கு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்படவில்லை. சிரஞ்சீவியின் சகோதரன் மகன் வருண்தேஜா நடித்த முகுந்தா சிறந்த படமாக பாராட்டப்பட்டது. அந்த படத்துக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் விருது கொடுக்காமல் ஒதுக்கி விட்டனர்’’ என்றார்.

அனுஷ்காவை வைத்து ருத்ரமாதேவி என்ற சரித்திர படத்தை எடுத்த டைரக்டர் குணசேகர் கூறும்போது, ‘‘பல வருடங்கள் கஷ்டப்பட்டு அதிக பொருட் செலவில் ருத்ரமாதேவி படத்தை எடுத்தேன். இந்த படத்துக்கு வரி விலக்கு கேட்டபோது அரசு தரவில்லை. ஆனால் பாலகிருஷ்ணா நடித்த கவுதமி புத்ர சாதகர்னி படத்துக்கு ஆந்திர அரசும் தெலுங்கானா அரசும் வரி விலக்கு அளித்தன.

இதை நான் கண்டித்ததால் ருத்ரமாதேவி படத்துக்கு நந்தி விருதுகள் அளிக்காமல் ஒதுக்கி விட்டனர். இதில் கஷ்டப்பட்டு நடித்து இருந்த அனுஷ்காவுக்கும் விருது வழங்கவில்லை. பாலகிருஷ்ணாவின் லெஜன்ட் படத்துக்கு 9 விருதுகள் கொடுத்தது ஓரவஞ்னை’’ என்றார்.

டைரக்டர் நாகேந்திரா கூறும்போது, ‘‘நந்தி விருதுகள் தேர்வு நியாயமாக நடக்கவில்லை. பாகுபலி படத்தில் கதாநாயகனாக கஷ்டப்பட்டு நடித்த பிரபாசுக்கு விருது கொடுக்காதது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018