‘மங்காத்தா’ ஹாலிவுட் படத்தின் காப்பி கிடையாது - இயக்குநர் வெங்கட் பிரபு

‘மங்காத்தா’ படம், ஹாலிவுட் படத்தின் காப்பி கிடையாது என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு தயாரித்துள்ள ‘ஆர்.கே. நகர்’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில், கமல்ஹாசனை நக்கல் செய்யும் விதத்தில் சில வசனங்கள் இருந்ததாக எதிர்ப்பு எழுந்தது. அது தொடர்பான கமெண்ட்களில், வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ படம், ஹாலிவுட் படத்தின் காப்பி என்று நிறைய பேர் குறிப்பிட்டனர்.

அப்போதெல்லாம் அதற்குப் பதில் சொல்லாத வெங்கட்பிரபு, சமீபத்தில் நடைபெற்ற ஒரு பட விழாவில் பதில் கூறினார். “திருட்டு சம்பந்தமான எந்தப் படத்தை இயக்கினாலும், உடனே அது ஹாலிவுட் படத்தின் காப்பி என்று சொல்லிவிடுகிறார்கள்.

அப்படித்தான் நான் இயக்கிய ‘மங்காத்தா’ படத்தையும் கூறினர். நான் ஹாலிவுட் படத்தில் இருந்து கதையைத் திருடி எடுக்கவில்லை. திருட்டைப் பற்றிய படம்தான் எடுத்தேன்” என்று கூறினார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018