“5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்” நடிகை ராய் லட்சுமி பரபரப்பு பேட்டி

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி பட உலகிலும் பிரபலமாக இருப்பவர், நடிகை ராய் லட்சுமி. இவர் முதன்முதலாக, ‘ஜூலி-2’ என்ற இந்தி படத்தில், கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, ராய் லட்சுமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“ஜூலி-2 படத்தில், நான் படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு தகவல் பரவியிருக்கிறது. ‘டிரைலரை’ பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்ல தோன்றும்.

ஆனால், முழு படத்தையும் பார்ப்பவர்களுக்கு என் கதாபாத்திரம் மீது அனுதாபம் வரும். படத்தின் கதைப்படி, எனக்கு அப்பா கிடையாது. அம்மா 2-வது திருமணம் செய்து கொள்வார். என் வளர்ப்பு தந்தை என்னை “வெளியே போய் சம்பாதித்து வா” என்று விரட்டி விடுகிறார். நான் போராடி, சினிமா நடிகை ஆகிவிடுவேன். இது, ‘ஜூலி-2’ படத்தின் கதை.

மறைமுக அனுபவம்

சினிமாவில், சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என்று சில நடிகைகள் துணிச்சலுடன் சொல்லி வருகிறார்கள்.

அதுபோன்ற அனுபவம் எனக்கு நேரடியாக ஏற்படவில்லை. ‘கற்க கசடற’ என்ற தமிழ் படத்தில், டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் என்னை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அந்த படம் வெளியான பின், எனக்கு புதிய பட வாய்ப்புகளே வரவில்லை. 4 வருடங்களாக போராடினேன்.

அப்போது எனக்கு மறைமுகமாக அந்த அனுபவம் ஏற்பட்டது. அனுசரித்து போகும்படி கூறினார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. சம்மதித்து இருந்தால், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆகியிருப்பேன். அந்த சமயத்தில், எனக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாது. என்னைப் பற்றி அடுத்தடுத்து வதந்திகளை பரப்பினார்கள். அந்த வதந்திகளுக்கு பின்னால் யாரோ இருந்தார்கள்.

காதல் தோல்விகள்

என் வாழ்க்கையில், நான் 5 முறை காதல்வசப்பட்டு இருக்கிறேன். என் காதலர்களின் பெயர்களை சொல்ல முடியாது. அந்த 5 காதல்களும் தோல்வியில் முடிந்து விட்டன. ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போது, என் அறை கதவை பூட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து அழுது இருக்கிறேன்.

ஆண்களில், நிறைய நல்லவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆர்யா என் நெருங்கிய நண்பர். எங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்து வருகிறது. வெறும் நட்பு மட்டும்தான். அந்த நட்பை பயன்படுத்தி நான் அவரிடம் பட வாய்ப்பு கேட்பதில்லை.

‘செக்ஸ்’ தொல்லை

பெண்களுக்கு ஆண்கள் ‘செக்ஸ்’ தொல்லை கொடுப்பது போல், ஆண்களுக்கும் சில பெண்கள் ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதை நான் அறிந்து வைத்து இருக்கிறேன்.

எனக்கு அரசியல் தெரியாது. அதனால் அரசியலுக்கு வர மாட்டேன். ‘பத்மாவதி’ படத்தில் நடித்ததற்காக தீபிகா படுகோனேயின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்து இருப்பதை கண்டிக்கிறேன். நடிப்பு, எங்களுக்கு தொழில். கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும்.”

இவ்வாறு நடிகை ராய் லட்சுமி கூறினார்.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018