5G தொழில்நுட்பம் வழங்க நோக்கியா ஏர்டெல் இடையே புதிய கூட்டணி

நோக்கியா மற்றும் இந்தியாவின் முன்னணி டெலிகொம் நிறுவனமான ஏர்டெல் இணைந்து 5G தொழில்நுட்பம் மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சாதனங்களை வழங்கவுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

‘5G மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் செயலிகள் மக்களின் வாழ்க்கை தரத்தை அடியோடு மாற்றும் தன்மை கொண்டவை. அந்த வகையில் நோக்கியாவுடன் இணைந்து இவற்றை எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க் பிரிவு தலைவர் அபைய சவர்கோன்கர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

புதிய 5G நெட்வொர்க்களை பயன்படுத்தி ஸ்மார்ட் நகரங்கள், கனெக்ட்டெட் வாகனங்கள் உள்ளிட்ட மேலும் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண முடியும். அதிவேக இண்டர்நெட் மூலம் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சாதனங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும்.

முன்னதாக நோக்கியாவுடன் இணைந்து 5G தொழில்நுட்பம், இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு செய்தது. இதை தொடர்ந்து இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018