விருப்பம் இருந்தால் போனில் தொடர்பு கொள்ளுங்கள்: “திருமணத்துக்காக பெண் தேடுகிறேன்”நடிகர் ஆர்யா தகவல்

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலம் அறிமுகமானார். நான் கடவுள், மதராச பட்டணம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, கடம்பன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.


ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. நயன்தாராவுடனும் இணைத்து பேசப்பட்டார். இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் தேடுவதாக நேற்று வீடியோவில் பரபரப்பாக பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.


வீடியோவில் ஆர்யா கூறியிருப்பதாவது:-


போனவாரம் ஜிம்மில் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா பேசிக்கொண்டு இருந்த ஒரு விஷயம் வெளியே கசிந்துவிட்டது. அது எனக்கு தெரியாமல் எனது நண்பர்கள் விளையாட்டுத்தனமாக செய்தது. ஆனால் அதில் பேசிய எல்லா விஷயமும் உண்மைதான். நான் கல்யாணத்துக் காக பெண் தேடிக்கொண்டு இருக்கிறேன். பொதுவாக அனைவரும் தங்களுடைய வாழ்க்கை துணைவரை அவர்கள் வேலை பார்க்கும் இடம், நண்பர்கள், உறவினர்கள் குடும்பத்தினர் மூலம் அல்லது இணையதளங்கள் மூலம் தேடுவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை.


எனக்கு பெரிய எதிர்பார்ப்புகளும், நிபந்தனைகளும் கிடையாது. உங்களுக்கு என்னை பிடித்து இருந்தால் நான் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணைவனாக இருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் உடனே எனக்கு போன் மூலம் அழைப்பு விடுக்கவும். நான் விளையாட்டுத்தனமாக இதை செய்கிறேன் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். இது எனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் அழைப்புக்காக காத்து இருக்கிறேன்.


இவ்வாறு வீடியோவில் பேசி அதில் தன்னை தொடர்பு கொள்ளும்படி போன் நம்பரையும் வெளியிட்டு உள்ளார். அந்த நம்பரில் தொடர்பு கொண்டால் உங்கள் பெயர், ஊர், வேலை, குடும்ப விவரங்கள். வெளிநாட்டில் இருக்கிறீர்களா? உள்நாட்டில் இருக்கிறீர்களா? கல்வி தகுதிகள் என்ன? அப்பா, அம்மா விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்யுங்கள் என்று குரல் ஒலிக்கிறது.


ஆர்யா வீடியோவில் பேசி சமூக வலைத்தளம் மூலம் பெண் தேடுவது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018