இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இலங்கை அணி 205 ரன்னில் ஆல்–அவுட் அஸ்வின் அபார பந்துவீச்சு

நாக்பூரில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த சூழலில் கருணாரத்னேவுடன், கேப்டன் சன்டிமால் ஜோடி சேர்ந்து அணியை சிக்கலில் இருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்த இந்த கூட்டணியின் முன்னேற்றத்துக்கு, இஷாந்த் ‌ஷர்மா முட்டுக்கட்டை போட்டார். ஸ்கோர் 122 ரன்களாக உயர்ந்த போது அவரது பந்து வீச்சில் கருணாரத்னே (51 ரன், 147 பந்து, 6 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் பிறகு வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (24 ரன்) சிறிது நேரம் கேப்டன் சன்டிமாலுக்கு ஒத்துழைப்பு தந்தார்.

அவரது வெளியேற்றத்துக்கு பிறகு இலங்கை அணி தடம்புரண்டது. கேப்டன் சன்டிமால் போராடினாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. தனது பங்குக்கு 57 ரன்கள் (122 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த சன்டிமால், அஸ்வினின் பந்து வீச்சில் இடக்கை பேட்ஸ்மேன் போல் திரும்பி (ரிவர்ஸ் ஸ்வீப்) அடிக்க முயற்சித்து, எல்.பி.டபிள்யூ. ஆகிப்போனார். முதலில் நடுவர் விரலை உயர்த்த மறுத்தார். பிறகு இந்திய கேப்டன் கோலி அப்பீல் செய்து, சாதகமான தீர்ப்பை பெற்றார்.

முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா, இஷாந்த் ‌ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு ஒரு விக்கெட்

அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்ட நேர இறுதியில் லோகேஷ் ராகுலின் (7 ரன்) விக்கெட்டை இழந்து 11 ரன் எடுத்துள்ளது. முரளிவிஜய் (2 ரன், 28 பந்து), புஜாரா (2 ரன், 7 பந்து) களத்தில் இருக்கிறார்கள். 2–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018