வரும் தேர்தல் மோடிக்கும் மக்களுக்கும் இடையேயான தர்மயுத்தம்: கெஜ்ரிவால்

வரும் தேர்தல் பிரதமர் மோடிக்கும், பொது மக்களுக்கும் இடையேயான தர்மயுத்தம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கே வெற்றி:

இதுகுறித்து டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் தெரிவித்ததாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.,யால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது மக்கள் விழிப்படைந்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பொது மக்களுக்கும் இடையேயான தர்மயுத்தமாக இருக்கும். இதில் பொதுமக்களே வெற்றி பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொது வேட்பாளர்:

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரி தெரிவித்ததாவது: தேசம் ஆபத்தான சூழலில் உள்ளது. அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கும் பா.ஜ.,விடமிருந்து தேசத்தை மீட்க எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.

2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றிருந்தாலும், 31 சதவீத ஓட்டுகளையே பெற்றிருந்தது. பிற கட்சிகள் 69 சதவீத ஓட்டுகளை பெற்றன. எனவே எதிரணிகள் ஓரணியாக திரண்டு ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.,வுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை மட்டுமே நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018